அதே கண்கள்

சிவப்பு செதில்களின்
சினுங்கள் கேட்டே
விழிக்கின்றன கண்கள்
காலையில்

இரவில் அவைகளின்
முனங்கள்களுடனே
துயில்கின்றன
அதே கண்கள்

 

அறியாமலே

நான் எதை இழந்து
தேடுகின்றேன் என
அறியாமலேயே

கண்டெடுக்கின்றது
உன்னை மட்டும்
மனசு

தேடலில் சுகம் கண்டு
தேடலையே தொழிலாக்கியது
கண்கள்

ஆமாம், நீ எங்கிருக்கின்றாய்
தலைவா?

நிழலாய் பின் தொடரும் வெளிச்சம்

என்னை நெடுந்தூரம்
பயணிக்க வைத்து
எந்தன் கரைதலை

நீ அங்கேயே அமர்ந்து
விசும்பி அழுது
ஏங்கும் அந்த
கணங்களின் காதலை

ஏனடி இருவருமே
அமர்ந்து அனுபவிக்காமல்

என்னை தொடரும் நிழலின்
வெளிச்சமாக மட்டும் நீ…

என்னடி செய்தாய்

பூப்பூக்கா செடிகளை
மட்டும் நட்டு வைத்தேன்
பூவனம் முழுவதும்
நான்

என்னடி செய்தாய்
நீ
இலைகளும் பூத்து
வீசுகின்றது உன் வாசம்..

மாலை மழையில்


மறந்தும் குடை
எடுத்துச் செல்வதில்லை
நான்

மார்கழி மாத
மாலை மழையில் நீ
நனைந்து மழைக்கு
காய்ச்சல் தந்த

அந்த
எதார்த்த நிகழ்ச்சியிலிருந்து…

நிலவாக நீ வருவாய் என்று

உனக்கு தெரியாது
என்பதுபோல் என்
காலை உனது கால்
உரசிக்கொண்டு
நாம் பேசியிருக்க

நீலவான வீதியில்
நான் கட்டிய
உனக்கான வீட்டில்
நான் மட்டும் தனியே
வாழ்ந்துக்கொண்டிருக்கின்றேன்

நீல வானில் நீ வருகையில்
வின்மீன்கள் குத்தும் என்று
என் கைகள் சிவக்க
அப்புறப்படுத்தி 
நீ முத்தமிட்டு
எனை சிவக்க செய்த
அந்த மழைக்கால
உன் கடைசி பிரிதலின்
நினைவுகளின் ஆருதலுடன்

நிலவாக நீ
வருவாய் என்று.

தேவதையின் காடு

விடியாத இரவெல்லாம்
உன் கண்விழியில்
வைத்தாய்

விடிந்த வானம்
தேடும் நிலவாக
என்னை செய்தாய்

மின்சார பூவின் மின்னல்
மனதோடு உரசும் தென்றல்
ஏன் தந்தாய்? நீ ஏன் வந்தாய்?

கனவோடு கண்கள் தொலைத்து
இரவெல்லாம் உன்னை தேடும்
என் தூக்கம்?

மாறன் காண மல்லிகையே
மனதில் தந்தாய் மலையினையே
ஏன் பெண்ணே?

ஓடாத நதிஒன்று
கடல் சேர்ந்த மாயம் என்ன?
தேடாத பொருளொன்று
கைசேர்ந்த அர்த்தம் என்ன?

என்னை சுற்றும் உலகம் மட்டும்
உன்னை சுற்றும் காரணம் என்ன?
கடவுள் காண கண்கள் இன்று
உன்னை கண்டு கடவுளானதென்ன?

நில்லடி!
சொல்லடி! இல்லை
கொல்லடி….

தொடுவானப்பூக்களில்

அந்த தொடுவானப்பூக்களில்
என்னதான் ஒழிந்திருக்கின்றது

யாதுமற்ற உன் சூன்யதில்
மட்டிக்கொண்ட என் மனசைப்போல

நீ சொன்னாலின்றி
எதுவுமே கேட்பதில்லை
எனக்கு

நான் இன்னும்
சொல்லாத என் காதலைப்போல!

நீரோடை

முத்தம் பூத்த
பூமியில்
கண்ணாடி மழை

உடைந்து
நொறுங்கியது
மழையின் துளிகள்

பூக்களுக்குள்
தஞ்சம் புகுந்தது

உன் நா மின்னல்
சுலற்றி அடித்தலில்

நீரோடை மட்டும்
ஏனடீ என் மனதில்?

 

குடைக்குள் காளான்

உன்னோடு
மழையில்
நனைந்த சமயங்களில்தான்

குடைக்குள்
பூத்த காளான்கள்
போலே

என்னுள்ளே
மழைபொழிந்த
மௌனங்களை
உணர்ந்தேன்.

« Older entries