தொகுப்பு - செப்டம்பர் 26, 2006

12.தன்னலதாயின் உறவுகளில்

தன்
மாரழகுக்கு வேக்யானம்
கற்பித்து
சேய்யழ்கை
சீக்கில்விட்டுவிட்டு

தாய் உறவை
தவிடாய் காற்றில்
விட்ட
தன்னலதாயின்
உறவுகளில்

மார்பு காம்புகளுக்காய்
ஏங்கும் – நாங்கள்
எந்தஉறவுகளை
நம்பிகைபிடிப்பது
இவ்வுலகில்

தன்னினப்பாலை
தவிர-எவ்வுயிரும்
ஈந்ததில்லை
பிற உயிரிடம்
மனிதனை தவிர…

ஒட்டுக் கோவணத்தில்
ஒட்டிய காசுக்காய்
ஒன்டிய கூட்டத்தில்
விலை போனாயோ -தாயே

மனம் மாண்ட
மனிதத் தாய்களே
உங்களை விட
நாய்கள் எவ்வள்வோ
மேல்….

11.உறவுகள் ஊருக்காக

அப்பாவின் உடலில்
நெஞ்சு தீப்பற்றி
எரிகிறது

உடல் வெந்து
உருக தொடங்கியது
நெற்றி சுருங்கி
வேகத்தடையாகிறது
மயிர் கால்கள்
மாண்டு போகிறது
விரல் நகங்கள்
வீழ்ந்து கிடக்கிறது
மூட்டு கின்னங்கள்
முடங்கி கொள்கிறது
முதுகுத் தண்டு
எழுந்து நிக்கின்றது…….

சடலம்சுடப்பட்டது -
வெட்டியான்
மேற்பார்வையில்

பெயர் பலகை
அகற்றப்பட்டது
மதில் சுவரில்

தபால்காரரின்
வசதிக்காக….!

உறவுகள்
ஊருக்காக…

10.தாய்மடி வாசம்

தாய்மடி வாசம்
தரனியில் தேடி
தவழ்ந்துகொண்டிருப்பவன்
நான்…

எப்போதவது
கிடைக்கக்கூடும்….

அதுவரை
பொரு மனமே..

தாய்மடி வாசம்
தருபவள்
மனைவியாககூட
இருக்கக்கூடும்….

எனெனில்
வேண்டி பெருவதே
வாழ்க்கை என்பதால்…

9.எதுவோ அதுவே

எதை
எடுத்தாயோ
அது
என்னுள்லிருந்தே
எடுக்கப்பட்டது…

எதை
மறுக்கிறாயோ
அது
என்னுள்ளேயே
புதைக்கப்படுகிறது

எதுவோ
அதுவே
காதலாகி
கசிந்து
என்னுள்
கனிகிறது…

8.படுக்கையில் நான்

படுக்கை
துறந்து
பல்துலக்குகிறேன்
கண்ணாடி
முன்

படுக்கையில்
நான்
கண்ணாடியில்

கையில்
காணவில்லை
பல் துலக்கி

படுக்கையில்
நான்…

7.எனக்காய்

எனக்காய்
ஏங்குகிறது..

பூமாலை
பூக்கடையில்
புது வேட்டி
துணிக்கடையில்

மேளதாளங்கள்
மத்தளக்காரனிம்
பழைய நாற்காலி
பரண் மேல்

இருந்தும்
நடை பிணமாய்…

6.மனிதனுக்காக அல்ல

நான்
என்ன செய்துமுடித்தேன்
என்று
என்னை சுற்றி இவ்வளவு
கூட்டம்..
நான்
என்ன சொல்லிவிட்டேன்
என்று நாற்காலி
வனப்பில்ஒய்யாராமய்
நான்..
நான்
எங்கே போகிறேன்
என்றுவண்ணம்
தரித்த பல்லாக்கு
முன் எல்லோரும்…

நிருத்துங்கள்
இந்த
கோமாளித்தனத்தை…
வாசியுங்கள் – என்
மரண வாக்கு மூலத்தை..

மகாத்மாக்களுக்கு
இடையில்-எனை
புதைத்து விடாதீர்கள்
ஜாபாவான்களுக்கு
மேல் வைத்து
எரித்துவிடாதீர்கள்..

மலை உச்சிமேல்
இருந்துஉருட்டி விடுங்கள்
பிணம் திண்ணும்
கழுகளுக்கு இறையாகுகிறேன்..

வழி நெடுக
மலர் தூவி
வண்டுகளை
பட்டினி போடாதீர்..

சதையருது
குளத்தில்இடுங்கள்
மீன்கள் பசியாரட்டும்..

மிஞ்சிய எழும்பை
நாய்களுக்கிடுங்கள்
நன்றியாவது காட்டட்டும்..

நான்இறந்தபின்னும்
பசியாற்ற நினைக்கிறேன்…

மனிதனுக்காக அல்ல…