தொகுப்பு - டிசம்பர் 16, 2006

22.நச்சுபாம்புகள்


காமத்தின்
பசியில்

நவநாகரிக
நச்சுபாம்புகள்
நகரத்தை
நரகமாக்கின..

தன்முகத்தை
கிழித்துக் கொண்டது
காதல்..

21.தொடர்விருச்சம்

உனக்காய்
உடம்பெல்லாம்
கண்கள்
வைத்தேன்?

உயிருக்குள்
இடமொன்று
ஒதிக்கிவைத்தேன்!

அன்று
தோல்விகளுக்குள்
தொடர்விருச்சம்

இப்போது
தேடுகிறேன்

தொலைத்துபோன
என்
தனித்தன்மையை!

20.வ(ர)ராதச்சனை


முத்தசுவையில்
இரத்தவெறி-

தூக்கில்
தொங்கினாள்
புதுபெண்..