தொகுப்பு - டிசம்பர் 19, 2006

29.கொஞ்சும் கவிதை


இவைவெறும்
வார்த்தைகள்
அல்ல-

என்னுள்
நீ
நடத்திய
வேள்விகளில்
எரிந்துபோக
மறுத்து!

நான்
மலர்ந்த
தருனங்கள்?

28.திரவியம் தேடு



சேர்த்துவைத்த
முத்தங்கள்
சிதறிபோயின
சில்லரைக்காக..

நான் இங்கே..

என் நாட்டில்
நீ அங்கே..

நமக்கான
நாமெங்கே?

27.சூட மலர்ந்தது நிலா


என்னவள்
சூட மலர்ந்தது
நிலா..

அவள்
கன்னத்து
மிலிர்தலைக் கண்டு
நாணி-
நாளை மலர்வதாய்
சொல்லி மறைந்த்து..

இதைவிட சிறப்பாய்..