தொகுப்பு - ஜனவரி, 2007

44. தேவதை

நிலவொளியில்
எப்போதெல்லாம்
உன்னை என்னி
வெளிர்கிறேனோ
அப்போதெல்லாம்
எனக்கு பின்னால்
சிறகைவிரித்த
ஒரு தேவதை
கண்ணீர் வடிக்கின்றாள்.

43.காத்துக்கொண்டிருந்தபோதுதான்

உனக்காய்
காத்துக்கொண்டிருந்தபோதுதான்
காதலிப்பதற்கும்
காதலிக்கப்படுவதற்கும்
இடையிலான மிகப்பெரும்
வித்யாசம் அறிந்தேன்..!

42.உன்னால் மட்டும் !

உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது
எந்தபூவை
சூடினாலும்
இரண்டாமிடத்துக்கு
தள்ளிவிடுகிறாய்..?

41.மீராவுக்காக…

தம்புராக்கள்
ஏங்குகிறது
மீராவுக்காக…
மீராவோ
செல்போன் பிடியில்?

40.தொலைந்த தொப்புள் கொடி..

உறவுகள் தேடி
ஓடாய் தேய்த – ஒரு
உயிரின் ஓளமிது..

தொப்புள் கொடியை
தொலைத்த முதலே
தொலைவில் தெரியும்
தொலைந்த விடியலை – தேடும்
தோய்ந்த உயிரிது…

அம்மா என்றேன்
அம்மாவிடம் அல்ல
ஜய்யா என்றேன்
அப்பாவிடம் அல்ல
அண்ணா என்றேன்
அண்ணன் அங்கில்லை
அக்கா என்றேன்
அவளும் சொந்தமில்லை…

இருந்தும்
சில நொடி உறவுகள் -எனை
மெல்ல திண்ணத் துடிக்கும்
வயிற்று பசிக்காக….

பால் சோறு உண்டதில்லை
தாலாட்டும் கேட்டதில்லை
படுத்துறங்க தோளுமில்லை
விடைக்கான வழியுமில்லை
விடிந்தாலும்- எனக்கு
விடியலில்லை…

எஞ்சிய சோறும்
எச்சில் இலையும்
எப்போதும் எனக்காய்
எங்கேயும் காத்திருக்கவில்லை….

இவற்றை நம்பியே
இரவல் உயிரை
இன்னமும் வாழவைகிறேன்…

மாமனில்லை
மதனி இல்லை
தாத்தா பாட்டி
பார்த்ததில்லை….

இன்னும் கிடைக்காத
உறவுகளுக்கு
தெரியாத பெயர்கள்….

தாய்முகம் பார்ததில்லை
தாய்மொழியும் அறிந்ததில்லை
தகப்பனார் தெரியவில்லை
தாகம் தான் திறவில்லை…

அனாதை தனிமைக்குள்
அரசாலும் ராஜாவாய்
அண்ணமிட்ட ஆன்மாக்கள்
அன்றைய உறவுகளாய்..

குப்பை தொட்டிகள்
கோயில் மதில் சுவர்கள்
யாருமற்ற மணல் மேடுகள்
இவைகள்-
பெற்றெடுத்த
சிற்றரசர்கள்
சில்லறைக்காக – இன்னமும்
சிணுங்கிக்கொண்டு தான்
சீருகிறார்கள்….

ஒரு நிமிட உறவால்
முறை தவறிய உன்னால்

உறவுகளைதொலைத்து – என்னுள்
தொலைந்துக் கொண்டிருக்கிறேன்…

உன்னையும் தான்…

39.காகித கருவறைகள்

சிலருக்கு சில
உறுப்புக்கள்
தேவையற்றது -
ஆறாம் விரல்போல்!
எனக்கு
கருவறை…
எனக்கும்
பாஞ்சாலிக்கும்
வித்தியாசம்
உண்டெண்றால்
அவள் பத்தினி
நான் ?????
வினாக்குறிகள்
மட்டுமே
விடையாய்
முளைக்கின்றன!
என்
கருவறையை
காகிதமாய் கசக்கியதில்
உனக்கும் பங்குண்டு
என்னவனே!
சாட்சி
என்(?) குழந்தை!

38.அபாய அறிவிப்பு !

காதல் புயலில்
மாட்டிக்கொண்டது
மனசு காற்றாலை!
அபாய
அறிவிப்பையும் மீறி
கொடுத்துக்கொண்டிருந்த்து
ஆசை மின்சாரத்தை!

37.இல்லாமையின் சுகம்

வறுமை என்னை
வாரிக்கொண்டபோதுதான்
பசியின் அருமை தெரிந்தேன்..
இளமை என்னை
கடந்தபோதுதான்
முதுமையின் வலிமை அறிந்தேன்..
காதல் என்னை
வெறுத்தபோதுதான்
அன்பின் தாக்கம் புரிந்தேன்..
இப்படி
எல்லாவற்றையும்
இழந்தபோதுதான்
இல்லாமையின்
சுகமறிந்தேன்.!

சொர்கத்தின் வாசலிலே..


அகால மரணம் எனை அவசரமாய் அள்ளிப்போட்டுக் கொண்டதால்அழுது புலம்புகிறேன்,, சொர்கத்தின் வாசலிலே…
கதவுகள் இன்னும் திறக்கப்படவிலலை மனக்கவலை இன்னும் தீரவில்லை, பேருள்ளம் கொண்டவர்களே கொஞ்சம் நியாயத்தை சொல்லுங்கள்..

இரண்டு மாதத்துக்கு முன்னர் திருமணம் நிச்சியக்கபட்ட புதுமாப்பிள்ளை நான், இப்போது சொர்கத்தின் வாசலிலே..,

நிச்சயக்கபட்ட நாள் முதலே காதலர்களாய் கவிதை பாடிவந்தோம், என் வாழ்க்கை சக்கரத்தில் ஆரங்களாய் தாய்,தந்தை, ஓர் பாசமான தங்கை, அச்சானியாக வருங்காலத் துணைவி, இவர்களுக்காகவே வண்டியை ஓட்டும் பொருப்புள்ள சராசரி மனிதன் நான், எனக்கு ஏன் இத்த சோதனை..

என் நிச்சியத்தின் போதே, என் உணர்வுகளுக்கெல்லாம் தன் உதிரத்தை உரமாக்கியத் தாய், உயிரை எமனிடம் உயிலெழுதி வைத்துக்கொண்டிருந்தாள். அந்த ஒப்பற்ற உத்தமிக்காய் நிச்சியக்கப்பட்ட உள்ளங்களின் இணைப்பு இது..

எங்களை விட்டு பிரியும் வேலையிலும், ஓயாது உழைத்து கொண்டிருக்கும் தன்னலம் பாரா தாய் அவள்.நான் நேரம் கழித்து வீட்டுக்கு வந்தாலும் விழி முடாது காத்திருக்கும் கருனை அவள். என் தந்தை ஒன்றும் சலைத்தவர் அல்ல, என் இதயக்கூட்டில் விடி வெள்ளியாய் வழிகாட்டும் கடவுள் அவர்.
என் சொர்வுகளுக்கெல்லாம் சொப்பனமாய், என் தங்கை. துள்ளித்திரியும் கடை முயல் குட்டி அவள்.என்னுள் இருந்த இரண்டாம் கவியை கண்டுணர்ந்தவள் காதலி, ஆம் எங்களின் இரண்டாம் தாய்..

இவ்வளவும் வாய்த எவனுக்கும் சொர்கம் பூமியிலே…

ஓர் மழைக் கால இரவு நேரம், அலுவலகத்திக்கு அவசர அலைப்பு, தாய் நம்மை விட்டு பிரிந்து கொண்டிருக்கிறாள்,,, உனை காண துடித்துக்கொண்டு..
அடித்து பிடித்து மொப்பட்டை எடுத்தேன், துக்கம் நெஞ்சை கனமாக்கியது,, தாயே கொஞ்சம் பொருத்துக்கொள் இதோ தலைமகன் புயலென புறப்படுகிறேன்.. கண்கள் மட்டும் சாலையில், எண்ணம் எல்லாம் தாய்மையில்..

காற்றும் மழையும் மின்னலுடன் போட்டியிட்டுக்கொண்டிருத்த்து,,,தாயே கொஞ்சம் பொருத்துக்கொள்.?

வெட்டிய மின்னல் ஒன்று, என் தலையில் தடவிக்கொடுத்தது..
அகால மரணம் அவசரமாய் அள்ளிப்போட்டுக் கொண்டது…இப்போது சொர்கத்தின் வாசலிலே… அழுது புலம்புகிறேன் முகம் கானமுடியாத் தாயின் முகத்துக்கா,,

என் தாயை கண்டால் கொஞ்சம் அசுவாசப்படுத்துங்கள்..
தயவு செய்து நான் இங்கிருப்பதை சொல்லிவிடாதீர்கள்..

சரி நான் வருகிறேன்..

// சொர்கத்தின் கதவுகள் திறக்கப்படுகிறது.. அங்கே இருகரம் நீட்டி தாய் அவனை அழைத்து கொல்கிறாள்.

தாய்மை – தன்னலம் பாராத பாசவலை
காதலி – இன்னும் தாயகவில்லை //

36.அவளிடம் சொல்லிவிடதே


நமக்குள் மட்டும்…

மிதமான மின்னலும்
இதமான புயலும்
மனசுக்குள் மையம்
கொண்ட கார்காலம்…

மின்சாரம் இல்லாமல்
விளக்குள் இல்லாமல்
நம்மை சுற்றிவட்டமிடும்
இலட்சம் மின்மினிகள்..

கண்கள் மட்டும்
விழித்திருக்க
வழியெங்கும்
நானும் நீயும்
நம்மை தேடிக்கொண்ட
காதல் காலம்…

உன் மைவிழி
அடித்த தந்திகளை
தவறாமல் – என்
உயிர் மூச்சு
வாங்கிக்கொண்டதும்..
நான் அனுப்பிய
உன் நினைவுகளை
நீ வருடுவதும்..
நம்முள் வசந்தகாலம்.

சூடாகி தூளன-
நெஞ்சங்கள்
உயிரால் உரவாடிய
இதமான மழைக்காலம்..

எனக்காய்
என்னுள் வாழும்
என்னவளின்
நினைவே

அவளிடம்
சொல்லிவிடதே
எனக்கானவள்
நீயென்று..

« முந்தைய இடுகைகள்