தொகுப்பு - ஜனவரி 3, 2007

A16.என் கண்மனி நீயடி

இப்போதெல்லாம்
யாரையும் நிமிர்ந்து
பார்பதில்லை நான்..
என்
கண்களை பார்த்தே
உன்னை
கண்டுபிடித்துவிடுவார்கள்
என்று..

A15.தெரிந்த தெரியாதவைகள்

நீ விரும்புவது
என் கவிதைகளை
என்று எனக்கு
தெரியும்..
உனக்கு தெரியுமா?
நான் விரும்புவது
உன்னை என்று..!

A14.தனிமையில்

நீ
இதழ்பிரிக்காமல்
உதிர்த்துவிடுகிறாய்
சொற்களை
உன் கண்களில்

தனிமையில்
சத்தமிட்டுக்கொள்கிறேன்
உன் பெயர்சொல்லி
நான்..