தொகுப்பு - ஜனவரி 4, 2007

A17.மகாத்மாவுக்காக அல்ல

தோழா!
அகிம்சை என்னுள்
ஆறாக்காயமாய்
அவமாணங்களையே
பரிசளிக்கிறது..
சமுதாயம்
வன்முறையையும்
வக்கிரத்தையம்
ஏவியே விடுகிறது..
இருந்தும் மெளனமய்
என்னுள் அழுகின்றேன்..
கற்றுத்தந்த
மகாத்மாவுக்காக அல்ல
என்னுள் கோட்சே
பிறந்துவிடக்கூடாது
என்பதற்காக..