தொகுப்பு - ஜனவரி 8, 2007

33.பருக்கள்

னவில் நேற்று
தொலைந்து போனேன்….
தெரியாத ஊரில்
தனியே நான்

தொலை தூரம்
நடந்துவிட்டேன் -ஆதாரமாய்
பாதத்தில்எண்ணற்ற
முற்கள்….

திடிரென என்னை
சுற்றிகூட்டம்
“நான் எங்கிருக்கிறேன்?
நீங்கள் யார்?”
பதில் ஒன்றும்
வரவில்லைஅவனிடம்
முகம் திருப்பிக்கொண்டான்
பின்பக்கம் கண்கள்
கவனிக்க தவறினேன்….
முன் உண்டோ கண்?

முயற்று பார்த்ததில்
குழந்தை ஒன்றிடம்
“ஊர் என்ன?
உன் பேரென்ன?”
என் கேள்வி -பதில்வருமுன்னே
எனை தேடிநான்கு பேர்……

தூக்கி சென்றுகிடத்தினர்
தனியே -
எனை சுற்றிவெளிச்சம்
அவர்கள்இருளாய்…..

அருகில் குழி பரிக்கப்பட்டது
மறுபடியும் அதேகேள்வி
பதில் இல்லை அவர்களிடம்
அவர்களே இனி பேசட்டும்….

குழியுனுள் நான்அவர்களே
இனி பேசட்டும்….

மண் மூடி புழுக்கள்
கன்னத்தை பதம்பார்கிறது
அவர்களே இனி பேசட்டும்….

கரையான் கால்
கட்டைவிரலை
அறிக்கின்றது

உத்ரி எழுந்து
கண்விழித்தேன்….

எதிரே கண்ணடி
முகத்தில் பருக்கள் !

32.ஜென்மம் ஏழுகொண்டேன்

நெற்றியில் பொட்டுமிட்டு
வெய்குழல் தாந்திருத்தி
வட்டக்கரிய விழி- கண்ணம்மா
எனை கட்டி இழுக்குதடி!

பட்டு துணியுடுத்தி
பாத சலங்கை நீபூட்டி
வெட்டும் மின்னலடி- கண்ணம்மா
உன் சுந்தர நடையழகு!

வண்ணக்குஞ்சம் கட்டி
வாரிமஞ்சள் நீபூசி
கொத்தும் பாம்படியோ- கண்ணம்மா
உன் பின்னல் ஜடையழகு!

மெத்த மத்தளமோ
எழில்மொத்தம் பின்னழகே
கொட்டும் முரசடியே – கண்ணம்மா
உன் முட்டும் முன்னழகே!

உனை தீண்டும் போதினிலே
நீ சுடும் தீஞ்கனலே
சொல்லும் மொழிகளிலே- கண்ணம்மா
தேன் தமிழ் மொழியழகே!

ஜென்மம் ஏழுகொண்டேன்
காதலை நெஞ்சில் கண்டேன்
சுத்தரி நீ இல்லையென்றால் -கண்ணம்மா
சொர்கத்தை அடைந்திடுவேன்!

31.மலடி

என் பேனா மனைவி
பெற்றெடுத்த குழந்தைகளில்
பிழை ஏற்பட்டால்
அழிக்க முற்படுவதில்லை
திருத்தவே முயல்கிறேன்..
கவிதை தந்தை மட்டும்
தன் படைப்புகளை
எனக்கு
புலப்படாமல் வைத்திருந்தால்
என்
பேனா மனைவி
இன்னமும் மலடியாகத்தான்
இருந்திருப்பாள்..