{ ஜனவரி 26, 2007 @ 12:33 பிற்பகல் }
·
{ காமம், வன்முறை }
{ Tags: காமம் }

சிலருக்கு சில
உறுப்புக்கள்
தேவையற்றது -
ஆறாம் விரல்போல்!
எனக்கு
கருவறை…
எனக்கும்
பாஞ்சாலிக்கும்
வித்தியாசம்
உண்டெண்றால்
அவள் பத்தினி
நான் ?????
வினாக்குறிகள்
மட்டுமே
விடையாய்
முளைக்கின்றன!
என்
கருவறையை
காகிதமாய் கசக்கியதில்
உனக்கும் பங்குண்டு
என்னவனே!
சாட்சி
என்(?) குழந்தை!