தொகுப்பு - மார்ச், 2007

64. அடுத்தது

எப்படியோ
கவிஞனாக்கிவிட்டாய்
என்னை

அடுத்தது என்ன?
பைத்தியம் தானே

63.தூரல்

உனக்கென்ன
மழையில் நனைந்தபடியே
வீடடைந்துவிடுகின்றாய்

மழைவிட்டும்
தூரல் போடுவது
என்னுள் தானே

62.திருடி

தொடுவானச்சாலையில்
நடைபோகிறேன்
என்று சொல்லியிருந்தால்

நட்சத்திரங்களை
அப்புரப்படுத்தியிருப்பேன்

பார்!
உன் ஒளியை திருடிக்கொண்டு
எப்படி ஜொலிக்கிறதென்று.

61.பாதி

நீயும் பாதி
நானும் பாதி

நம்முள் ஊற்றி
நிரம்பிக்கொள்ளும்
தருணம் மீதி!

60.விவசாயம்

எதை விதைத்தாய்
என்று தெரியவில்லை

மனசெல்லாம்,
வேர்பிடித்திருக்கின்றது.

58.ஒப்பனை

சகியே!
உனக்கு தெரியாது

நிலா
தினம் வரிக்கட்டி
வானத்திலிருந்து
உன்னைப்பார்த்து
ஒப்பனை இட்டுக்கொள்வது.

59.அவைகள்

காதலுக்கு கண் இல்லை
என்பதை இனியும்
நம்புவதாக இல்லை

உன்னை
எனக்கு காட்டிக்கொடுத்ததே
அவைகள்தான்

57.வீதி

வீதியில்
கைகள் வீசி நடக்கின்றாயா?
என்னை, கண்களால்
கட்டி இழுத்துச் செல்கின்றாயா?

56.மூச்சு

நான்
நுகர்ந்து பார்த்த
வாசனைகளிலே

வாசனைமிகுந்தது
உன்
மூச்சுக்காற்றுதான்

55.விரல்கள்..

உன் பெயரில் உள்ள
எழுத்துக்களில் ஒன்றாவாது

புத்தகத்தின் தலைப்பில்
ஒட்டிக்கொண்டால் போதும்

பக்கங்களை
புரட்டிவிடுகின்றன
விரல்கள்..

« முந்தைய இடுகைகள்