தொகுப்பு - April 3, 2007
{ April 3, 2007 @ 8:29 பிற்பகல் }
·
{ காதல் }
{ Tags: கருவறை, காதல் }
·
{ }
கல்லரை முன்
கண்ணீர் சிந்தி
கண்துடைக்க
என்னை எழுப்பிவிடாதே
உன்
கருவறையில்
ஜனனிக்க வேண்டும்
நான்!
{ April 3, 2007 @ 8:11 பிற்பகல் }
·
{ காதல் }
{ Tags: காதல் }
·
{ }
உன்
உள்ளங்கையில்
குடியேற ஆசைப்பட்டு
முற்றத்தில் சொட்டியது
அந்திமழை
{ April 3, 2007 @ 8:03 பிற்பகல் }
·
{ காதல் }
{ Tags: காதல் }
·
{ }
உதிர்ந்தது பூ
வலியில் துடித்தாய்
நீ!
{ April 3, 2007 @ 7:51 பிற்பகல் }
·
{ காதல், நீ }
{ Tags: காதல் }
·
{ }
சொட்டுச்சொட்டாக
உள் இறங்கி
உரைந்துப் பனிச்சிலையானது!
மனசெல்லாம்
நீ!
{ April 3, 2007 @ 7:46 பிற்பகல் }
·
{ காதல் }
{ Tags: காதல் }
·
{ }
என்
உயிர் நெய்த
கருவறையில்
உனைக்கிடத்தி
காதல் வலியெடுக்க
காத்திருந்தேன்
உன்னை பிரசுவிக்க!
{ April 3, 2007 @ 7:40 பிற்பகல் }
·
{ காதல் }
{ Tags: காதல் }
·
{ }
தீக்குள் விரலை வைத்தால்
உன்னை தீண்டும் இன்பம்
தோன்றுதடி
நான்
பூக்களை பரித்துவிட்டால்
உன் பாதி உயிர்
கரையுதடி
நீ
என்ன முரண்களின்
மகளா!
{ April 3, 2007 @ 7:33 பிற்பகல் }
·
{ காதல் }
{ Tags: காதல் }
·
{ }
என் உதடு யாத்திரீகன்கள்
உன் செவ்விதழை சுவைத்தபோதே
பிடித்துவிட்டது எனக்கு
செவ்வாய் தோசம்!