தொகுப்பு - அக்டோபர் 16, 2007

90. அழகே! அழகு!

எல்லாக் காலங்களிலும்
அழகானவைகள்
அழகானதாகவே
இருக்கும் என்றால்

உன்னால் மட்டும்
எப்படி
நாளைவிட குறைவாக
நேற்றைவிட அதிகமான
அழகாக, இன்று மட்டும்
காண்பிக்கமுடிகிறது

சகியே!

89.நீ நான் உலகம்

உன்னைத் தவிர
எல்லாம் அழகழகாக
தோன்றுதடி

நீ பேரழகியாக
நான் என்னியமுதல்…