தொகுப்பு - April 11, 2008

திகட்டாத இம்சை

என்னை
நிலைக்கண்ணாடியில்
காணும் எல்லா
தருணங்களிலும்

திகட்டாத இம்சையாக
எனக்குப் பின்னால்
நீ தெரிந்து
தொந்தரவு செய்கின்றாய்
தினமும்

இப்பொழுதாவது
காட்டு உன்
கண்ணாடி கண்னை

உன்னுள் இருக்கும்
என் முழுமையை
கண்டுகொள்கிறேன்.

இப்படி என்னை
பார்க்காதே என்கிறாயே?

நீயே சொல்.
பின் எப்படிதான்
உன்னை பார்ப்பதாம்!

வர்ணனைகள் கேளாத
சிலைகள் உண்டோ
பெண்ணே!

எதைக் காட்டி அழைத்தாயோ
தெரியவில்லை

தாய்முகம் கண்ட
சேய் போல்
உன்னை நோக்கி

தவழ்ந்தது
மனசு.

மடிந்தவைகளெல்லாம்
உன்னிடமிருந்து
பெறும்போது மட்டுமே
உயிர்த்தெழுகினறன

என் உதடுகள்
மட்டும் விதிவிலக்காயென்ன?